புதுடில்லி:தங்கள் தடுப்பூசிகளை உடனடியாக உபயோகிக்க அனுமதிகோரிய, 'சீரம் மற்றும் பாரத் பயோடெக்' நிறுவனங்களிடம், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின், வல்லுனர்கள் குழு, நேற்று தடுப்பூசிகள் குறித்த கூடுதல் தரவுகளை கோரியது.நாட்டில், கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில், ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், பல தடுப்பூசிகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, நாட்டில் தங்கள் தடுப்பூசிகளை உடனடியாக உபயோகிக்க அனுமதி கோரி, அமெரிக்க நிறுவனமான பைசர், இந்திய நிறுவனங்களான சீரம் மற்றும் பாரத் பயோடெக்கும், டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம், தனித்தனியே விண்ணப்பித்தன.
இந்நிலையில், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின், வல்லுனர்கள் குழு, நேற்று ஆலோசனை நடத்தியது. அப்போது, மூன்று நிறுவனங்களின் விண்ணப்பங்களும் ஆய்வு செய்யப்பட்டன. பைசர் நிறுவன நிபுணர்கள் இல்லாததால், அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப் பட வில்லை.சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும், நேற்று அனுமதி வழங்கப்பட வில்லை. எனினும், அடுத்த கூட்டத்திற்குள், தடுப்பூசிகள் குறித்த கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்க, இரண்டு நிறுவனங்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE