அனில் கபூர் சீருடையால் சர்ச்சை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அனில் கபூர் சீருடையால் சர்ச்சை

Added : டிச 10, 2020
Share
புதுடில்லி:'ஏ.கே., வெர்சஸ் ஏ.கே.,' படத்தில் நடிகர் அனில் கபூர், இந்திய விமானப் படையின் சீருடை அணிந்தவாறு இழிவாக பேசும் காட்சிகளுக்கு, இந்திய விமானப்படை, நேற்று எதிர்ப்பு தெரிவித்தது.'நெட்பிளிக்ஸ்' தளத்தில், 'ஏ.கே., வெர்சஸ் ஏ.கே.,' என்ற படம், வரும், 24ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே, இந்த படத்தின், 'ட்ரெய்லர்' இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. அதில், நடிகர் அனில்

புதுடில்லி:'ஏ.கே., வெர்சஸ் ஏ.கே.,' படத்தில் நடிகர் அனில் கபூர், இந்திய விமானப் படையின் சீருடை அணிந்தவாறு இழிவாக பேசும் காட்சிகளுக்கு, இந்திய விமானப்படை, நேற்று எதிர்ப்பு தெரிவித்தது.

'நெட்பிளிக்ஸ்' தளத்தில், 'ஏ.கே., வெர்சஸ் ஏ.கே.,' என்ற படம், வரும், 24ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே, இந்த படத்தின், 'ட்ரெய்லர்' இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. அதில், நடிகர் அனில் கபூர், விமானப் படை வீரரின் சீருடையை அணிந்து, இழிவாக பேசுவது போல், காட்சிகள் அமைந்துள்ளன.இந்நிலையில், அந்த காட்சிகளுக்கு, இந்திய விமானப்படை, நேற்று, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுகுறித்து, இந்திய விமானப்படை, தன் அதிகாரப்பூர்வ, 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:இந்த, 'வீடியோ'வில் வரும் இந்திய விமானப் படையின் சீருடை, மிகவும் தவறாக உள்ளது. அதை உடுத்தி இருப்பவர் பேசுவது பொருத்தமற்றதாக அமைந்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படையினரின் நடத்தை விதிமுறைகளை ஒத்துப்போகும் வகையில், இந்த காட்சிகள் அமையவில்லை. எனவே, இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன், அந்த காட்சிகள் நீக்கப்படவேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, நடிகர் அனில் கபூர் கூறுகையில்,“படத்தின் ட்ரெய்லர், யாரையேனும் புண்படுத்தி இருந்தால், நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பிறர் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படம் உருவாக்கப்படவில்லை,” என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X