திலீப் குமார், ராஜ்கபூர் வீடுகளுக்கு விலை நிர்ணயித்தது பாகிஸ்தான்

Added : டிச 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெஷாவர்:நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள, பிரபல பாலிவுட் நடிகர்கள், திலீப் குமார், ராஜ்கபூரின் பூர்வீக வீடுகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின், கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பெஷாவர் நகரில், 300 ஆண்டு களுக்கு மேற்பட்ட, 1,800 பழைமையான கட்டடங்கள் உள்ளன. இந்நகரில், பிரபல பாலிவுட் நடிகர்கள், திலிப் குமார், ராஜ்கபூரின் பூர்வீக வீடுகளும் உள்ளன.நாடு சுதந்திரம்

பெஷாவர்:நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள, பிரபல பாலிவுட் நடிகர்கள், திலீப் குமார், ராஜ்கபூரின் பூர்வீக வீடுகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின், கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பெஷாவர் நகரில், 300 ஆண்டு களுக்கு மேற்பட்ட, 1,800 பழைமையான கட்டடங்கள் உள்ளன. இந்நகரில், பிரபல பாலிவுட் நடிகர்கள், திலிப் குமார், ராஜ்கபூரின் பூர்வீக வீடுகளும் உள்ளன.நாடு சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்டபிரிவினையில், இவர்களுடைய குடும்பம், மஹாராஷ்டிர மாநிலம்,மும்பைக்கு வந்தது. இவர்களுடை பூர்வீக வீடுகளை, பாகிஸ்தான் அரசு, பாரம்பரிய கட்டடங்களாக அறிவித்துள்ளது.

அதையடுத்து, அதன் உரிமையாளர்களிடம் இருந்து, இந்த வீடுகளை வாங்குவதற்காக, கைபர் பக்துன்கவா மாகாணம், தற்போது விலை நிர்ணயித்துள்ளது.மொத்தம், 1,089 சதுர அடி கொண்ட, திலீப் குமாரின் வீட்டுக்கு, 80.56 லட்சம் ரூபாயும், 1,633 சதுர அடி உள்ள, ராஜ்கபூரின் வீட்டுக்கு, 1 கோடியே, 50 ஆயிரம் ரூபாயும்விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Narayanan - Hyderabad,இந்தியா
10-டிச-202009:41:26 IST Report Abuse
Arul Narayanan They didn't come during partition. They started acting in Hindi films before partition and settled in Mumbai. Why Dilip Kumar, a Muslim come to India after partition?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X