சென்னை:'புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரண நிதியாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:நிவர் புயலால் நெல், வாழை உள்ளிட்ட விளைபொருட்களை இழந்து தவிக்கும் விவசாயிகள், வீடுகளையும் இழந்து வேதனையில் உள்ளனர். வேறு வழியின்றி, நிவாரண முகாம்களில் தங்கியிருப்போர் எல்லாம் தங்களின் எதிர்காலம் பற்றிய அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.அனைத்து பாதிப்புகள் குறித்தும், உரிய கணக்கெடுப்பை ஓரவஞ்சனையின்றி எடுத்து, இறுதிகட்டமாக முழு நிவாரண உதவிகளை வழங்கலாம். ஆனால், அதற்கு முன், 'கணக்கு எடுத்து நிவாரணம் கொடுப்போம்;
மத்திய அரசிடம் நிதி பெறுவோம்' என, சாக்கு போக்கு சொல்லி, வீராப்பு காட்டாமல், ஆழ்ந்த சோகத்திலும், துயரத்திலும் மூழ்கியுள்ள, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம், 5,000 ரூபாயும், விளைபொருட்களை இழந்த விவசாயிகளுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும், முதல் தவணை நிவாரணமாக, உடனே வழங்க, முதல்வர் முன்வர வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE