பட்டத்துடன் பறந்த சிறுவன்
இந்தோனேஷியாவின், லாம்பங் என்ற இடத்தில், திருவிழாவை முன்னிட்டு சில சிறுவர்கள் இணைந்து பிரமாண்டமான பட்டம் தயாரித்தனர். பின்னர், காற்றில் விட முயன்றபோது, 12 வயது சிறுவன் ஒருவன் பட்டத்தின் கயிற்றை இறுக பிடித்திருந்தால், திடீரென பட்டத்துடன் சேர்ந்து பறக்க தொடங்கினான். தொடர்ந்து, 30 அடி உயரம் வரை சென்ற அந்த சிறுவன் அங்கிருந்து கீழே விழுந்தான். இந்த பதைபதைக்கும் காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ரப்பர் கழிவில் சிக்கிய நாய்
தாய்லாந்தின், நகோன் நயோக் என்ற இடத்தில், தொழிற்பேட்டையில், ரப்பர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கழிவில் சிக்கிக் கொண்ட ஒரு நாய் அதிலிருந்து மீள முடியாமல் உயிருக்கு போராடியது. இதை கண்ட தொழிற்சாலை ஊழியர்கள் அங்கிருந்த ஜே.சி.பி.,இயந்திரத்தால் அதை வேறு இடத்துக்கு மாற்றினர். பின்னர், நீண்ட நேரம் போராடி நாய் மீது படிந்திருந்த ரப்பர் கழிவுகளை அகற்றி, அதை காப்பாற்றினர்.
மலை முழுவதும் வெண்பனி
சீனாவின், குயிங்லிங் மலைப்பகுதியில், மரங்கள், செடிகள், கொடிகள் என அனைத்து பகுதியிலும் பனி கொட்டி கிடக்கிறது. இதனால், மேலே இருந்து மலையை பார்க்கும்போது வெண்ணிற போர்வை போர்த்தி கொண்டு இருப்பது போல் காணப்படுகிறது. மரங்களில் இருந்து கொட்டும் பனித்துளி, சூரிய ஒளி பட்டு பல்வேறு வண்ணங்களில் காட்சியளிப்பது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அடேங்கப்பா... அசத்தல்!
இந்த வீடியோவை ஆரம்பத்தில் பார்க்கும்போது வரையாடு ஒன்று சிறிய குகைக்குள் படுத்திருப்பது போல் தோன்றும். ஆனால், வீடியோவை முழுமையாக பார்த்தால், ஆச்சரியத்தில் அடேங்கப்பா சொல்லாமல் இருக்க முடியாது. ஆம், ஒரு பெரிய மலைப் பகுதியின், நடுவில் அமைந்துள்ள குகையில்தான் அந்த ஆடு படுத்திருக்கிறது. இந்த காட்சிகளை கேமராமேன் ஒருவர் மிகவும் அழகாக வீடியோ எடுத்துள்ளார். தற்போது, இந்த காட்சி வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE