கோவை:ரயில் பயணத்துக்கு முன், இயக்க நேரம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ ரயில்வே இணையதளங்களில் தெரிந்துகொண்டு பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் போன்ற பேரிடர் சமயத்தில் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம், ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிக்கெட் முன்பதிவு பயணிகளுக்கு இயக்க நேரம் மாற்றம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ்., வாயிலாக ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துவருகிறது.இருப்பினும், இதுகுறித்த தகவல் கிடைக்காதவர்கள், விழிப்புணர்வு இல்லாதவர்கள் கடைசி நேர அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, ரயில்கள் ரத்து, புறப்பாடு நேரம், கால அட்டவணை, சிறப்பு ரயில்கள் குறித்த தகவல்களை ரயில்கள் புறப்படுவதற்கு முன்பு உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, புதுப்பிக்கப்பட்ட தகவல்களை, enquiry.indianrail.gov.in/ntes/index.html, www.irctc.co.in/nget/train-search ஆகிய இணையதளங்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., ரயில், 'கனெக்ட்' மொபைல் செயலி வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE