திருப்பூர்:கீழ்பவானி திட்ட கட்டுமானங்களை புனரமைக்க, 933 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
கீழ்பவானி திட்டத்தில், பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பவானிசாகர் அணையில் இருந்து, 125 கி.மீ., நீள வாய்க்கால் மூலம், 2.07 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பாசன வாய்க்கால், மதகுகள் மிகவும் சேதமடைந்துள்ளதால், சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
தமிழக அரசு, 933 கோடி ரூபாய் மதிப்பிலான புனரமைப்பு திட்டத்தை துவக்கியுள்ளது. புனரமைப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம், காங்கயம் கீழ்பவானி வடிநில கோட்ட அலுவலகத்தில் நடந்தது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கீழ்பவானி திட்ட வாய்க்கால்களில் ஏற்படும் கசிவினால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக சென்றடையவில்லை என, விவசாயிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
தற்போது துவங்க உள்ள, புனரமைப்பு திட்டத்தால், நீண்ட நாள் பிரச்னை முடிவுக்கு வரும். காளிங்கராயன் கால்வாய் மற்றும், 21 பாலங்கள், 659 மதகுகள் மற்றும் 27 வடிகால் கட்டுமானங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE