உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஆதிரை வேணுகோபால், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாழ்க்கை என்பது, நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை; அது எதிர்பாராமல் நடப்பவை. நடிகர் ரஜினி, அரசியலுக்கு வந்ததும் அப்படித் தான். இது இறைவனால், ஏற்கனவே எழுதப்பட்டது. முதலில் களமிறங்குவோம். வெற்றியோ, தோல்வியோ அது வரும் போது,
பார்த்துக் கொள்ளலாம்.

எதிர்மறை சிந்தனை உடையோரை, அவ்வளவு எளிதில் மாற்றமுடியாது. அவர்களின் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. நேர்மையான, ஆன்மிக அரசியலை, நாம் முன்னெடுத்துச் செல்வோம். நம் நாட்டின் பிரச்னையை தீர்க்க, மனம் பதற்றமில்லாத, பதவி ஆசை இல்லாத மனம் தான் வேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் உடைய ரஜினிக்கு, அது இருக்கிறது.

தற்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட, ரஜினியின் பேச்சு சிறப்பாக இருக்கிறது. யார் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை; மக்களை துாண்டி, போராட்டக் களத்தில் இறக்கிவிட விரும்பவில்லை. பணமும், புகழும் ரஜினியிடம் நிறையவே இருக்கிறது; அதனால், அதற்காக ஆசைப்படமாட்டார். இந்நேரத்தில், தன் உடல் நலத்திலும் ரஜினி கவனம் செலுத்த வேண்டும். அவர்ஏற்படுத்த விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு, தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE