தமிழ்நாடு

அகற்றப்படுமா: ஏரி, குளங்களின் ஆக்கிரமிப்புகள்...அதிகாரிகளின் நடவடிக்கை தேவை

Added : டிச 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனத்திலுள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கிடங்கல் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திண்டிவனத்திம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான வகாப்நகர், விவேகானந்தா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து
 அகற்றப்படுமா:  ஏரி, குளங்களின் ஆக்கிரமிப்புகள்...அதிகாரிகளின் நடவடிக்கை தேவை

திண்டிவனம்; திண்டிவனத்திலுள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கிடங்கல் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திண்டிவனத்திம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான வகாப்நகர், விவேகானந்தா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அதிக அளவில் மழை நீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதற்கு முக்கிய காரணம், திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ஏரி, குளம், குட்டை ஆகிய இடங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. குளம், குட்டை பகுதியை சுற்றி வீடுகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால், மழை நீர் வெள்ளம் குடியிருப்பு பகுதியில் புகுந்து நிற்கிறது. திண்டிவனம் நகராட்சி பகுதியில் மட்டும் 23 குளங்கள், 7 ஏரிகள் அமைந்துள்ளது. இதில் கிடங்கல் ஏரி, தாங்கல் ஏரி,காவேரிப்பாக்கம் ஏரி, திண்டிவனம் ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி, அவரப்பாக்கம் ஏரி ஆகியன உள்ளது. இதேபோல் தீர்த்தக்குளம், ராஜாங்குளம், அகழிகுளம், மாரிசெட்டிக்குளம், அய்யந்தோப்பு குளம், நாகலாபுரம் குளம் என 23 குளங்கள் அமைந்துள்ளது

. திண்டிவனம் நகரின் மைய பகுதியில் இந்திராகாந்தி பஸ் நிலையம் பின்புறம் கிடங்கல் ஏரி அமைந்துள்ளது. இது திண்டிவனம் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி ஆகியவற்றை விட பரப்பளவில் பெரியது. நகரின் மொத்த பரப்பளவான 1,800 ஏக்கரில் கிடங்கல் ஏரியின் பரப்பளவு 975 ஏக்கர் ஆகும்.கிடங்கல் ஏரியின் மூலம் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. ஏரியின் நீர்வரத்து மூலம், ஜக்காம்பேட்டை, கருணாவூர், ஓமந்தூர் கொந்தமூர், கிளியனுார் எடச்சேரி, கொஞ்சுமங்கலம், புதுகுப்பம், உப்புவேலுார், காரட்டை, அறுவடை போன்ற கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள் பயனடைந்தன. பருவமழை காலத்தில் இரண்டு போகம் பயிர் சாகுபடி செய்யப்பட்டன.கிடங்கல் ஏரியின் உபரி நீர் விவசாய பாசனத்திற்கு பிறகு, 50 கி.மீ., துாரம் சென்று மரக்காணம் அருகே கழுவெளியை அடைந்து கடலில் கலந்தது.

இத்தனை கிராமங்களின் விவசாயத்திற்கும், திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக கிடங்கல் ஏரி இருந்தது.அந்த அளவிற்கு விவசாயத்திற்கு பயன்பெற்று வந்த கிடங்கல், ஏரி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டும், போதுமான பராமரிப்பின்றி, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, குளம் போல் மாறிவிட்டது.ஏரியின் நீர்வரத்து வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டதால், மழைக் காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்து போனது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலர் கான்கிரீட் வீடு கட்டி ஆக்கிரமித்து வசித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள், நீர்நிலை புறம்போக்கு இடங்கள் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன் காரணமாக திண்டிவனம் பொதுப்பணித் துறை (நீர் வள ஆதார அமைப்பு) சார்பில், கிடங்கல் ஏரியை சுற்றி வீடு கட்டியுள்ள 300 பேருக்கு கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கிடப்பில் போடப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை ஆக்கிரமிப்புள் அகற்றப்படவில்லை.

இதேபோல் திண்டிவனத்திலுள்ள நாகலாபுரம், தீர்த்தக்குளம், மாரிசெட்டிக்குளம் உள்ளிட்ட பல குளங்கள் ஆக்கிரமிப்பில் பிடியில் உள்ளது. இதனால் தொடர் மழையின் போது அதிக அளவில் மழை நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து, குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வருகின்றது.திண்டிவனம் நகர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நகரப்பகுதியிலுள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி மற்றும் பொதுப்பணித்துரை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X