திண்டிவனம்; திண்டிவனம், கர்ணாவூர் சுடுகாட்டை சீரமைக்கும் பணிக்காக எம்.எல்.ஏ.,பொதுப்பணித்துறையினருடன் சென்று ஆய்வு நடத்தினார்.திண்டிவனம் கர்ணாவூர் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் மழைகாலத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பிரேதங்களை எடுத்து செல்வது சிரமமாக உள்ளது.இதை கருத்தில் கொண்டு, கர்ணாவூர் ஓடையில் அணைக்கட்டு பாதையை சீர் அமைப்பதற்காக, திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக எம்.எல்.ஏ.,சீத்தாபதிசொக்கலிங்கம் மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கனகராஜ் ஆகியோர் சுடுகாட்டு இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.இதில், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் சொக்கலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், இலக்கிய அணி அமைப்பாளர் சீன்னச்சாமி, ஒன்றிய செயலாளர் கண்ணன், நகர துணை செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE