விழுப்புரம்; விழுப்புரத்தில், டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பதாரர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன ஓட்டுநர் பழகுநர் உரிமம் பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் பொதுப்பணி வில்லை (பேட்ஜ்) ஆகியவற்றை பதிவு செய்வதற்கு நேற்று நுாற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர்.அப்போது, தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தாலும், ஏராளமானோர் இரு சக்கர வாகனத்துடன் வந்து காத்திருந்தனர். லைசென்ஸ் பதிவு, புதுப்பித்தல் விண்ணப்பதாரர்கள், கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளிவை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். இப்பணியை வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கிடேசன் மேற்பார்வையில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE