திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை 4ம் சோமவாரத்தை யொட்டி சங்காபிேஷகம் நடந்தது.அதனைமுன்னிட்டு 108 சங்குகள் மற்றும் கலசங்கள் வைத்து ேஹாமம் நடந்தது. அதனைதொடர்ந்து கலசங்கள் கோவிலை சுற்றிய பின் கிருபாபுரீஸ்வரர்க்கு 108 சங்குகள் கொண்டு அபிேஷகம் நடத்தப்பட்டு பின் சிறப்பு தீபாராதனை நடந்தது.சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆனந்தி சரவணக்குமார் விழா ஏற்பாடுகளை செய்து கோவிலுக்கு 108 சங்குகளை அன்பளிப்பாக வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE