திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மோதி பெண் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா, 50; இவர் கடந்த மாதம் 11ந் தேதி கொண்டசமுத்திரபாளையம் செல்லும் வழியில் மாலை 4:00 மணியளவில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் ஜெயப்பிரகாஷ், 25; ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா நேற்று இரவு 7:00 மணிக்கு இறந்தார்.புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE