விழுப்புரம் - விழுப்புரம் மாவட்டத்தில், சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள், அரிசி கார்டுகளாக மாற்றி கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைகளாக வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களின் ரேஷன் கார்டுகளை அரிசி பெறக்கூடிய கார்டுகளாக மாற்றம் செய்து தர வேண்டுமென வைக்கபட்ட கோரிக்கையை ஏற்கப்பட்டுள்ளது.இதன்படி, சக்கரை ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கார்டுகளை தகுதியின் அடிப்படையில் அரிசி கார்டுகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களின் ரேஷன் கார்டு நகலை இணைத்து, வரும் 20ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடமும் விண்ணப்பித்து கொள்ளலாம்.இது போல், பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து, சர்க்கரை ரேஷன் கார்டுகள் தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் கார்டுகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE