திருவெண்ணெய்நல்லுார் - திருவெண்ணெய்நல்லுார் அருகே சாராயம் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, 55; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம், 17 மதுபாட்டில் மற்றும் 8 பீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE