சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவுதி.மு.க., கூட்டணி கட்சியினர் 754 பேர் கைது

Added : டிச 10, 2020
Share
Advertisement
கடலுார்; டில்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் 754 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுாரில் நேற்று காலை அண்ணாபாலம் அருகில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, அய்யப்பன், அகில இந்திய காங்., உறுப்பினர் சந்திரசேகர், வி.சி., கட்சி கடலுார் லோக்சபா தொகுதி

கடலுார்; டில்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் 754 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுாரில் நேற்று காலை அண்ணாபாலம் அருகில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, அய்யப்பன், அகில இந்திய காங்., உறுப்பினர் சந்திரசேகர், வி.சி., கட்சி கடலுார் லோக்சபா தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டியில் தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர்கள் தணிகைச் செல்வம், ஆனந்தி, இந்திய கம்யூ., நகரசெயலாளர் சக்திவேல், மா.கம்யூ., உதயகுமார், காங்., நகர தலைவர் முருகன்,வி.சி.மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், த.வா.க.,சுரேந்தர், தமிழக மக்கள் ஜனநாயககட்சி மாவட்ட செயலாளர் ேஷக் நுார்தீன் உள்ளிட்ட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீமுஷ்ணத்தில் மா. கம்யூ., மாவட்ட குழு பிரகாஷ் தலைமையில் அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.பு.முட்லுாரில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துப்பெருமாள் தலைமையில் மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, வி.சி., எழில்வேந்தன், த.மு.மு.க., முஜிபுர் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர். கிள்ளை மேலச்சாவடியில், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமையில் வி.சி., மாவட்ட செயலாளர் அறவாழி உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம் ரயில் நிலையத்தில் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற தி.மு.க., மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு உட்பட 120 பேரை டி.எஸ்.பி., ராமச்சந்திரன், ரயில்வே பாதுகாப்புப்படை உதவி கமிஷனர் சின்னதுரை தலைமையிலான போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் ரவுண்டானாவில், தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 230 பேரை கைது செய்தனர்.சிதம்பரம் மேலவீதியில் நடந்தஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., சிதம்பரம் நகர செயலாளர் செந்தில் குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்விஜயராகவன், மா.கம்யூ., மாநிலக் குழு மூசா,இந்திய கம்யூ., சேகர், காங்.,கட்சி சித்தார்த்தன், வி.சி, கட்சியின் பால அறவாழி உட்பட பலர் பங்கேற்றனர்.பெண்ணாடம், கடைவீதியில் இந்திய கம்யூ., வட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, காங்., மாநில விவசாய அணி பிரிவு செயலர் கந்தசாமி உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி பஸ்நிலையத்தில் இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் சின்னதுரை, மா.கம்யூ., கட்சி மகாலிங்கம், ராஜேந்திரன் உட்பட 13 பேரும், ராமநத்தத்தில் மா.கம்யூ., வட்டக்குழு உறுப்பினர் மாயவன் தலைமையில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி பஸ்நிலையத்தில் தி.மு.க.,மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் தலைமையில் காங்.,தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்பரசு உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 754 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X