ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அருகே மழையில் நனைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் இறந்தார்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மதகளிர்மாணிக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச்சேர்ந்தவர் விஜயலட்சுமி, 38; இவரது கணவர் செந்தில்வேல்முருகன் வெளிநாட்டில் பணி புரிகிறார். இரு குழந்தைகள் உள்ளனர். விஜயலட்சுமி நேற்று மாலை பால் கறப்பதற்கு கன்றுக் குட்டியைபிடித்துக் கொண்டு வீட்டின் தோட்டத்திற்கு சென்றார். அப்போது ஒரு வாரமாக பெய்த மழையில் நனைந்திருந்த 10 அடி உயர சுவர் அவர் மீது விழுந்தது. அருகிலிருந்தவர்கள் வந்து உயிருக்கு போராடியவரை மீட்டு விருத்தாசலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE