ஓடையில் உயர்மட்ட பாலம் கட்ட தண்ணீரில் நின்று கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓடையில் உயர்மட்ட பாலம் கட்ட தண்ணீரில் நின்று கோரிக்கை

Added : டிச 10, 2020
Share
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில் தையான் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப் பகுதி மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கோரிக்கை விடுத்தனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில் இருந்து கோ. ஆதனுார் செல்லும் வயல் வழி சாலையின் குறுக்கே தையான் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மறுபுறம் சுமார் 700 ஏக்கர் நிலம் உள்ளது. கருவேப்பிலங்குறிச்சி

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில் தையான் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப் பகுதி மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கோரிக்கை விடுத்தனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில் இருந்து கோ. ஆதனுார் செல்லும் வயல் வழி சாலையின் குறுக்கே தையான் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மறுபுறம் சுமார் 700 ஏக்கர் நிலம் உள்ளது. கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள காட்டு ஓடையில் இருந்து வரும் வெள்ள நீர் தையான் ஓடை வழியாக சென்று மணிமுத்தாறில் கலக்கிறது.மழைக்காலங்களில் இந்த ஓடையில் அதிகளவு வெள்ள நீர் வருவதால் ஓடையின் மறுபுறம் இருந்த 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிவிட்டனர்.மேலும் தற்போது மேலப்பாலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மழைக் காலங்களில் மறுபுறம் உள்ள நிலங்களுக்கு செல்ல முடிவதில்லை.இப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாலம் கட்டி தருவதாக கட்சியினர் தேர்தல் வாக்குறுதி வழங்கியதோடு பணியை முடித்துக் கொண்டனர். தற்போது ஓடையில் வெள்ள நீர் அதிகமாகஓடுவதால் மறுபுறம் உள்ள வயல்களுக்கு சென்று பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மேலப்பாலையூர் கிராம விவசாயிகள் முழங்கால் அளவு நீரில் இறங்கி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X