சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் காரை நிறுத்தி மக்களிடம் முதல்வர் பழனிசாமி மனுக்களை பெற்றுச் சென்றார்.
கீரப்பாளையம் வழியாக வீராணம் ஏரியை பார்வையிட முதல்வர் சென்றார். பாழ்வாய்க்கால் மற்றும் பூதங்குடியில் ஒன்றிய செயலாளர் கருப்பன் தலைமையில் நின்ற கட்சியினர், வாழைக்கொல்லையில் நின்ற மக்கள் அருகில் காரை நிறுத்தி மனுக்களை பெற்று சென்றார்.பூதங்குடி ஊராட்சி அள்ளூர் பாழ்வாய்க்காலை சேர்ந்த அனைத்து குலாலர் சங்க பொதுச் செயலாளர் ராஜா அளித்த மனுவில், தமிழகம் முழுவதும் மண் பாண்ட தொழில் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும்.மண் பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் ரூ.2000 உதவித் தொகையை அதிகரித்துரூ.5000 தர வேண்டும்.சிதம்பரம் இளைமையாக்கினார் கோவில் குளத்தை துாய்மைபடுத்தி, கோபுரம் கட்டி கும்பாபி ேஷகம் நடத்த வேண்டும், என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE