புதுடில்லி: 'மத்திய தகவல் கமிஷன் உத்தரவின்படி, பிரதமரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான விபரங்களை வெளியிட முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், விமானப் படை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணம்
கடந்த, 2013, ஏப்ரல் முதல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் 2014ல் பிரதமராக பதவி ஏற்ற, நரேந்திர மோடி ஆகியோரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான விபரங்களை தரக் கோரி, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர், மத்திய தகவல் கமிஷனில் மனு தாக்கல் செய்தார். இவர் கேட்டுள்ள தகவல்களை அளிக்குமாறு, விமானப்படைக்கு, மத்திய தகவல் கமிஷன், கடந்த ஜூலையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக, விமானப்படை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் : இந்திய பிரதமரின் வெளிநாட்டு பயணங்களின் போது, பிரதமரின் சொந்த பாதுகாப்புக்காக அவருடன் செல்லும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பரிவாரங்களின் விபரங்களை கேட்டு மத்திய தகவல் கமிஷனில், லோகேஷ் பத்ரா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அச்சுறுத்தலாகி விடும்
இந்த விபரங்களை அளிக்குமாறு, தகவல் கமிஷனும் உத்தரவிட்டுள்ளது. அவர் கேட்டுள்ள தகவல்களை அளிப்பது, நாட்டின் ஒற்றுமைமற்றும் இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது டன், பிரதமரின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகிவிடும். எனவே, அந்த தகவல்களை அளிக்க முடியாது.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில், நாளை விசாரணைக்கு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE