பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி தேர்வு

Added : டிச 10, 2020
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி தேர்வுகான ஹால் டிக்கெட்டை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தொடர் மழை காரணமாக கடலுார் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்சார்பில் கடந்த 5ம் தேதி கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும், 6ம் தேதி இதர கூட்டுறவு

கடலுார்; கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி தேர்வுகான ஹால் டிக்கெட்டை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தொடர் மழை காரணமாக கடலுார் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்சார்பில் கடந்த 5ம் தேதி கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும், 6ம் தேதி இதர கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நடக்க இருந்த உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி, 5ம் தேதி நடக்க இருந்த தேர்வு வரும் 19ம் தேதியும், 6ம் தேதி நடக்க இருந்த தேர்வு 20ம் தேதியும் நடக்கிறது. இப்பதவிகளுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் 'ஹால்டிக்கெட்டை 8ம் தேதி முதல் கடலுார் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் http://www.cuddrb.in என்ற இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X