வில்லியனுார்; வில்லியனுாரில், போலீசாரின் வாகன சோதனையில், சிக்கிய பைக் திருடர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். .வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், புறவழிச்சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து நெம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள், கீழ்அக்ரஹரத்தை சேர்ந்த துரைசாமி மகன் ரகு,34; வில்லியனுார் மூர்த்தி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராஜவேலு,34; என்பதும், புதுச்சேரியில் இருந்து பைக் திருடி வருவதும், ஏற்கனவே ஒரு பைக்கை திருடி, ரகு வீட்டில் பதுக்கிவைத்திருப்பது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் திருடிய இரு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ரெட்டியார்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பைக் மற்றும் வழிப்பறி உள்ளிட்ட திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE