பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சுவர் இன்றி தேவம்பட்டு மின் நிலையம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
பொன்னேரி - தேவம்பட்டு துணை மின் நிலையத்தில் சுற்றுச்சுவர் இன்றி இருப்பதால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.மீஞ்சூர் ஒன்றியம், அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பட்டு கிராமத்தில் உள்ள துணை மின் நிலையம் பகுதியினை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் இருக்கிறது.உயர் அழுத்த மின் மாற்றிகள், மின்சார தளவாடங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கால்நடைகள்

பொன்னேரி - தேவம்பட்டு துணை மின் நிலையத்தில் சுற்றுச்சுவர் இன்றி இருப்பதால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.மீஞ்சூர் ஒன்றியம், அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பட்டு கிராமத்தில் உள்ள துணை மின் நிலையம் பகுதியினை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் இருக்கிறது.உயர் அழுத்த மின் மாற்றிகள், மின்சார தளவாடங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்கின்றன.கால்நடைகளை தேடி அதன் உரிமையாளர்களும், துணை மின் நிலையத்தினுள் சென்று வருகின்றனர்.மனநலம் பாதித்தவர்கள், சிறுவர்கள் விளையாட்டு தனமாக துணை மின் நிலையத்தில் நுழைந்து, அங்குள்ள மின் சாதனங்களை தொடும்போது, அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.துணை மின் நிலையம் ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியிலும், மின் நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில், தேவம்பட்டு பஜார் பகுதியில், அதன் அலுவலகமும், உள்ளது.சுற்றுச்சுவர் இன்றி இருக்கும் துணை மின் நிலைய பகுதியினை, மின் வாரியத்தினர் கண்காணிப்பதில்லை. அசம்பாவிதங்கள் ஏதும் நேரிடும் முன், துணை மின் நிலையத்தினை சுற்றிலும் சுற்றுச்சுவர் மற்றும் அலுவலக அறை அமைத்து கண்காணிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X