திருத்தணி - திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம், நேற்று, பள்ளி வளாகத்தில் நடந்தது.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலரும், பள்ளி தலைமை ஆசிரியருமான டி.தெமினா கிரோனப் வரவேற்றார்.இணை செயலர் சக்கரபாணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு - செலவு கணக்கு சரி பார்க்கப்பட்டது. தொடர்ந்து, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சிறப்பாக செயல்பட்டதற்காக, அரசின், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.இந்த தொகையில், பள்ளி வளாகத்தில் இருந்து, கழிப்பறைக்கு செல்வதற்கு சிமென்ட் சாலை, பழுதடைந்த கழிப்பறையை சீரமைப்பது மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் குமரேசன் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE