சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'லிப்டில்' சிக்கி தொழிலாளி பலி

Added : டிச 10, 2020
Share
Advertisement
மீஞ்சூர் - வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுதாகி நின்ற லிப்டில் சிக்கி, தொழிலாளி இறந்தார்.மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு கரையான்மேடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன், 48. இவர், வடசென்னை அனல் மின் நிலையம் முதல் நிலையில், தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில், நிலக்கரி கையாளும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம், 3வது மாடியில் பணி செய்துவிட்டு, கீழ் தளத்திற்கு

மீஞ்சூர் - வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுதாகி நின்ற லிப்டில் சிக்கி, தொழிலாளி இறந்தார்.மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு கரையான்மேடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன், 48. இவர், வடசென்னை அனல் மின் நிலையம் முதல் நிலையில், தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில், நிலக்கரி கையாளும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம், 3வது மாடியில் பணி செய்துவிட்டு, கீழ் தளத்திற்கு வருவதற்காக, லிப்டின் அருகில் சென்றார். லிப்ட் பழுதாகி கீழ் தளத்தில் நின்றிருந்தது. இது அறியாமல், கதவு திறந்திருப்பதை கண்டு, அதன் உள்ளே நுழைந்த மனோகரன், லிப்ட்டின் உட்பகுதி வழியாக விழுந்தார்.உள்ளிருந்த இரும்பு தளவாடங்களில் சிக்கி, பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மனோகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X