பொது செய்தி

தமிழ்நாடு

வீணாக கடலில் கலக்கும் மழை நீர் நீர்த்தேக்கம், தடுப்பணை அவசியம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி - ஆந்திர பகுதிகளில் இருந்து தமிழக ஏரிகள் வழியாக, 22 கி.மீ., கால்வாயை கடந்து, கடலில் வீணாக மழை நீர் கலப்பதை தடுக்க, தடுப்பு அணைகள், நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர மாநிலம், சத்தியபேடு காடுகளில் இருந்து வரும் மழை நீர், பாஞ்சாலை, அமரம்பேடு, பூவலம்பேடு, ஈகுவார்பாளையம், ஏடூர், கும்புளி

கும்மிடிப்பூண்டி - ஆந்திர பகுதிகளில் இருந்து தமிழக ஏரிகள் வழியாக, 22 கி.மீ., கால்வாயை கடந்து, கடலில் வீணாக மழை நீர் கலப்பதை தடுக்க, தடுப்பு அணைகள், நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர மாநிலம், சத்தியபேடு காடுகளில் இருந்து வரும் மழை நீர், பாஞ்சாலை, அமரம்பேடு, பூவலம்பேடு, ஈகுவார்பாளையம், ஏடூர், கும்புளி வழியாக, எளாவூர் ஏழு கண் பாலம் வந்தடைகிறது.அதேபோன்று, ஆந்திர - தடா மண்டல பகுதிகளில் இருந்து மாநெல்லுார் ஏரியை வந்தடையும் மழை நீர், சாணாபுத்துார், ஏடூர் வழியாக உள்ள கால்வாயை கடந்து, எளாவூர் ஏழு கண் பாலம் வந்தடைகிறது.மேற்கண்ட இரு கால்வாயும், 22 கி.மீ., நீளம் கொண்டதாகும். இடைப்பட்ட பாஞ்சாலை, சாணாபுத்துார் ஆகிய இரு இடங்களில் மட்டுமே தடுப்பு அணைகள் இருந்த போதிலும், அவை சேதமடைந்து, மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படுவதாக, அந்தந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.ஒட்டு மொத்த, 22 கி.மீ., கால்வாயை துார் எடுத்து அகலப்படுத்த வேண்டும். இருக்கின்ற தடுப்பு அணைகளை சீர் செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.கூடுதலாக தடுப்பு அணைகள் ஏற்படுத்த வேண்டும். மாநெல்லுார் ஏரி, எளாவூர் ஏழு கண் பாலம் அமைந்துள்ள பகுதியில் நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் சார்பில், பல ஆண்டு காலமாக தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.கன மழைக் காலங்களில், ஆண்டுதோறும், 2 டி.எம்.சி., மழை நீர், மேற்கண்ட கால்வாயை கடந்து, வீணாக கடலில் கலக்கிறது என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத, சம்பந்தப்பட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கடலில் மழை நீர் வீணாக கலப்பதை தடுக்க, எளாவூர் ஏழு கண் பாலம் உள்ள பகுதியில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் குறித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறோம். 'ஒப்புதல் கிடைத்தவுடன், நீர்த்தேக்கம் அமைக்கப்படும்' என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X