பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் , 75 சதவீத ஏரிகள் நிரம்பின

Added : டிச 10, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 90 சதவீத குளங்கள், 75 சதவீத ஏரிகள் நிரம்பி உள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 40 ஊராட்சிகள் உள்ளன. அந்தந்த ஊராட்சிக்குட்பட்ட குளங்கள், ஊருணிகள் என, 224 உள்ளன. அதேபோல், ஒன்றிய பராமரிப்பில், 54 ஏரிகள் உள்ளன.இவற்றில் பெரும்பாலான குளங்கள், ஏரிகள், இந்தாண்டு மழையால் நிரம்பிவிட்டதாக, வட்டார வளர்ச்சி அலுவலர்

காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 90 சதவீத குளங்கள், 75 சதவீத ஏரிகள் நிரம்பி உள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 40 ஊராட்சிகள் உள்ளன. அந்தந்த ஊராட்சிக்குட்பட்ட குளங்கள், ஊருணிகள் என, 224 உள்ளன. அதேபோல், ஒன்றிய பராமரிப்பில், 54 ஏரிகள் உள்ளன.இவற்றில் பெரும்பாலான குளங்கள், ஏரிகள், இந்தாண்டு மழையால் நிரம்பிவிட்டதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.இது குறித்து, காஞ்சிபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் கூறியதாவது:ஒன்றியத்திலுள்ள குளங்களில், 90 சதவீதம், பருவமழைக்கு நிரம்பியுள்ளன. பருவ மழைக்கு முன்பே, ஏரிகள், குளங்கள் சீரமைக்கப்பட்டன. இதனால், தற்போது பெய்து வரும் மழையால், 75 சதவீத ஏரிகளும், 90 சதவீத குளங்களும் நிரம்பியுள்ளன.இன்னும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அனைத்து ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பி விடும். நீர்நிலைகளால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X