மண்ணில் புதைந்து வீணாகும் பெயர் பலகை பலனளிக்குமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்ணில் புதைந்து வீணாகும் பெயர் பலகை பலனளிக்குமா?

Added : டிச 10, 2020
Share
உத்திரமேரூர் உத்திரமேரூர் அடுத்த, வெங்கச்சேரியில், மண்ணில் புதைந்து வீணாகி வரும், வழிகாட்டி பெயர் பலகையை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் செல்லும், வாகன ஓட்டிகளின் வசதிக்காக வெங்கச்சேரியில், வழிகாட்டி பலகை அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர்.அதன்படி, திருமுக்கூடல், உத்திரமேரூர்,

உத்திரமேரூர் உத்திரமேரூர் அடுத்த, வெங்கச்சேரியில், மண்ணில் புதைந்து வீணாகி வரும், வழிகாட்டி பெயர் பலகையை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் செல்லும், வாகன ஓட்டிகளின் வசதிக்காக வெங்கச்சேரியில், வழிகாட்டி பலகை அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர்.அதன்படி, திருமுக்கூடல், உத்திரமேரூர், மேல்மருவத்துார் ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்ட வழிகாட்டி பெயர் பலகை மற்றும் அதை 'பிட்டிங்' செய்வதற்கான இரும்பு கம்பம், வெங்கச்சேரி சாலையோரம், கடந்த மார்ச் மாதம் போடப்பட்டது.பின், கம்பத்தை, நிலத்தடியில் புதைக்க, பீடம் அமைக்கப்பட்டதோடு, பணி கிடப்பில் போடப்பட்டது. ஏழு மாதங்களுக்கும் மேலாக, வழிகாட்டி பெயர் பலகையும், இரும்பு கம்பமும் மழையில் நனைந்து, மண்ணில் புதைந்து, துருப்பிடித்து வீணாகி வருகிறது.எனவே, வாகன ஓட்டிகளின் வசதிக்காக, வழிகாட்டி பெயர் பலகையை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X