மாமல்லபுரம் - சென்னை - மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும், விபத்துகளை குறைக்க, திட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.சென்னை - புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் நிர்வகித்து, பராமரிக்கிறது. இச்சாலையில், சென்னை, அக்கரை - மாமல்லபுரம் இடையே, நான்குவழிப் பாதையாக உள்ளது.இவ்வழித்தட பகுதியில், மாமல்லபுரம், முட்டுக்காடு சுற்றுலா இடங்கள், திருவடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், விடுதிகள் உள்ளிட்டவை உள்ள நிலையில், வாகன போக்குவரத்து பெருகி, விபத்தும் அதிகரிக்கிறது.விபத்து ஏற்படுவதை குறைக்க, தமிழ்நாடு சாலை பாதுகாப்பு திட்டத்தில், உலக வங்கி நிதியில், நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப கட்டமைப்புகள் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது.இதற்காக, நெடுஞ்சாலைத் துறை, சாலை நிறுவனம், பாதுகாப்பு திட்டம், காவல், வட்டார போக்குவரத்து உள்ளிட்ட நிர்வாகத்தினர், செப்டம்பர் மாதம், கிழக்கு கடற்கரை சாலையில் ஆய்வு நடத்தினர்.செங்கல்பட்டு மா வட்ட பகுதியில், மாமல்லபுரம், கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, பேரூர் பகுதிகளில், வாகன வேகப்பதிவு வீடியோ கேமரா, போக்குவரத்து கண்காணிப்பு கேமரா, மின்னணு தகவல் பலகை, ரப்பர் வேகத்தடை உள்ளிட்டவை அமைய உள்ளன.இந்நிலையில், கேமராக்கள் அமைக்க, சாலை மைய தடுப்பில், கம்பங்கள், இணைப்பு கேபிள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE