கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுப்ரமணியசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமிக்கு எதிரான, அவதுாறு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும்போது, அந்த நாட்டு அதிபரிடம் பேசி விடுவித்ததாகவும், ஆனால், பிரதமருக்கு வெறுமனே கடிதம் மட்டுமே, முதல்வர் எழுதி வருவதாகவும், சுப்ரமணியசாமி கூறியிருந்தார். 2014 செப்டம்பரில், பத்திரிகைகளில் இந்த செய்தி
Subramanian Swamy, Madras HC, High Court, BJP, Rajya Sabha MP, சுப்ரமணியசாமி

சென்னை : பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமிக்கு எதிரான, அவதுாறு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும்போது, அந்த நாட்டு அதிபரிடம் பேசி விடுவித்ததாகவும், ஆனால், பிரதமருக்கு வெறுமனே கடிதம் மட்டுமே, முதல்வர் எழுதி வருவதாகவும், சுப்ரமணியசாமி கூறியிருந்தார். 2014 செப்டம்பரில், பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியானது.

இதையடுத்து, சுப்ரமணியசாமி மற்றும் பத்திரிகைகளுக்கு எதிராக, தமிழக அரசு, அவதுாறு வழக்குகள் தொடர்ந்தது. தனக்கு எதிரான அவதுாறு வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news


சுப்ரமணியசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி, பத்திரிகைகளுக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர பிறப்பித்த அரசாணையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சுப்ரமணியசாமிக்கு எதிரான அவதுாறு வழக்கையும் ரத்து செய்து, நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

'உரிய முகாந்திரம் இன்றி தாக்கல் செய்யப்படும் அவதுாறு வழக்குகளுக்கு, அபராதம் விதிக்கப்படும்' எனவும் நீதிபதி எச்சரித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-டிச-202011:54:53 IST Report Abuse
Malick Raja எல்லாம் நூலிழையில் வித்தியாசம் என்பது உலகறிந்த உண்மை .. சாமியா ..கொக்கா
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
10-டிச-202022:01:50 IST Report Abuse
bal வழக்குகள் எல்லாம் இப்போது ஐந்து வருட திட்டங்களாகிவருகின்றன...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
10-டிச-202022:01:17 IST Report Abuse
bal தமிழக அரசு வழக்கு போட தோண்டியவர்களை உள்ளே போடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X