வாலாஜாபாத் - காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராமத்தில் வைத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 108 பால் குடம் எடுக்கும் விழா வரும், 12ம் தேதி நடைபெற உள்ளது.பாலகிருஷ்ணர் பஜனை கோவிலில் இருந்து, காலை, 10:30 மணிக்கு புறப்படும் பால் குட ஊர்வலம், தோப்பு தெரு, கீழ் தெரு வழியாக, வைத்தீஸ்வரர் கோவிலை வந்தடைந்த பின், சிவனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து, மாலை, 4:30 மணி முதல், 6:00 மணிக்குள், சனி பிரதோஷ வழிபாடு நடைபெறும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE