லாரி மோதி முதியவர் பலிசெங்கல்பட்டு: செங்கல்பட்டு, பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிமாயன், 55. இவர், நேற்று முன்தினம், பரனுார் சுங்கச்சாவடி அருகில், சாலையில் நடந்து சென்றார்.செங்கல்பட்டிலிருந்து சென்னை சென்ற கன்டெயனர் லாரி, முதியவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தோர் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, ஜோதிமாயன் இறந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.மூவருக்கு, 'குண்டாஸ்'செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த, பொன்விளைந்த களத்துார் சுரேஷ், 39, மணிகண்டன், 24, கவுதம், 28, ஆகியோர், செங்கல்பட்டு, புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகரான சேகரை, செப்டம்பரில், வெட்டிக் கொலை செய்தனர்.இவர்கள் மூவரையும், 'குண்டர்' சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் ஜான்லுாயிஸ், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.தொடர்ந்து, மதுராந்தகம் கிளை சிறை, சென்னை புழல் சிறையில் உள்ள மூவரிடமும், குண்டர் சட்ட நகலை, போலீசார், நேற்று வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE