ஒரு மாதமாக தேங்கி நிற்கும் கழிவு நீர் - நிம்மதி இழந்து தவிக்கும் தெருவாசிகள்

Added : டிச 10, 2020
Share
Advertisement
கே.கே.நகர் - கே.கே.நகர், கிழக்கு வன்னியர் தெருவில், 20 நாட்களுக்கும் மேலாக தேங்கி நிற்கும் கழிவுநீரால், அப்பகுதி மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா பிரதான சாலை வழியாக, நெசப்பாக்கம் கழிவு நீரேற்று நிலையத்திற்கு, பாதாளச் சாக்கடை குழாய் செல்கிறது.நெசப்பாக்கம் கழிவு நீரேற்று நிலையத்திற்கு, மாம்பலம், சைதாப்பேட்டை, அசோக் நகர், கே.கே.நகர்,
 ஒரு மாதமாக தேங்கி நிற்கும் கழிவு நீர் - நிம்மதி இழந்து தவிக்கும் தெருவாசிகள்

கே.கே.நகர் - கே.கே.நகர், கிழக்கு வன்னியர் தெருவில், 20 நாட்களுக்கும் மேலாக தேங்கி நிற்கும் கழிவுநீரால், அப்பகுதி மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா பிரதான சாலை வழியாக, நெசப்பாக்கம் கழிவு நீரேற்று நிலையத்திற்கு, பாதாளச் சாக்கடை குழாய் செல்கிறது.நெசப்பாக்கம் கழிவு நீரேற்று நிலையத்திற்கு, மாம்பலம், சைதாப்பேட்டை, அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.,நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அண்ணா பிரதான சாலை வழியாக, கழிவு நீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது, இக்குழாயில் இருந்து, கழிவு நீர் கசிந்து, மண் அரிப்பு ஏற்பட்டு, அண்ணா பிரதான சாலையில், சமீபத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், திடீர் மெகா பள்ளங்கள் ஏற்பட்டன. இச்சாலையின் பல இடங்களில், எப்போது வேண்டுமானாலும் மேலும் பல பள்ளங்கள் ஏற்படலாம் என்ற, அவலநிலை காணப்படுகிறது,இதனால், கழிவு நீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குழாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கே.கே.நகர், கிழக்கு வன்னியர் தெரு மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில், பல நாட்களாக தேங்கியுள்ளது.மேலும், கிழக்கு வன்னியர் தெருவில் உள்ள குறுக்கு தெருக்களில், 20 நாட்களுக்கு மேலாக, 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.இதில், கிழக்கு வன்னியர் தெரு, ஜெயின் குடியிருப்பு அருகே உள்ள குறுக்கு தெருவில், 20 வீடுகளும், மாணிக்கம் குடியிருப்பு அருகே உள்ள குறுக்கு தெருவில், 100 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.கழிவு நீரில் நடந்து செல்வதால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை, நோய் தொற்று பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதியை தொலைத்துள்ளனர். சிறு மழை பெய்தால் கூட பீதியடைகின்றனர்.மேலும், குடிநீர் வாரிய குழாயில், கழிவு நீர் கலந்து வருவதுடன், ஆழ்துளை கிணறுகளிலும் கழிவு நீர் கலந்துள்ளது.இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் இணைந்து, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எங்கள் தெருவில், 18 வீடுகள் உள்ளன. கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், வீட்டில் இருந்து நிம்மதியாக சாப்பிட கூட முடியவில்லை. சுவாசிக்க சிரமப்படுகிறோம். தற்காலிகமாக காலி செய்து செல்ல, வேறு இடமும் இல்லை. குடிநீரில் கழிவு நீர் கலப்பதால், குடிநீருக்கும் திண்டாடி வருகிறோம்.சி.கலைசெல்வி, 45, கிழக்கு வன்னியர் குறுக்கு தெருஎங்கள் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கால் மூட்டு அளவிற்கு கழிவு நீர் தேங்கியுள்ளது. புகார் அளித்தும் எந்த பயனுமில்லை. இதனால், 1,500 ரூபாய் கொடுத்து, தனியார் லாரி வாயிலாக, கழிவு நீரை அகற்றினோம். ஆனால், இரவிலே மீண்டும் கழிவு நீர் தேங்கி விட்டது.எம்.வாணி ஸ்ரீ, 39, கிழக்கு வன்னியர் தெரு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X