கே.கே.நகர் - சாலிகிராமத்தில், அடுக்குமாடி குடியிருப்பில், குப்பை, மழை நீர் தேக்கம் உள்ளிட்ட பிரச்னையால், குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கோடம்பாக்கம் மண்டலத்தில் சேகரமாகும் குப்பையை அகற்ற, புதிய நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பணிகள் நடக்கின்றன.குப்பை நிரம்பி வழிகிறதுஇந்த மண்டலத்திற்கு உட்பட்ட, சாலிகிராமம், ஆற்காடு சாலையில், 'ஜெயின் சுவர்ணகலா' என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 120 வீடுகள் உள்ளன. இங்கிருந்து, தினமும், 1,200 கிலோ குப்பை கழிவுகள் சேகரமாகின்றன. இந்நிலையில், நான்கு நாட்களாக அங்கு குப்பை அகற்றப்படவில்லை. இதனால், குடியிருப்பின் முன் பகுதியில் உள்ள நடைபாதையில், குப்பை நிரம்பி வழிகிறது.மேலும், இந்த குடியிருப்பின் பின்புறம், புதர்மண்டி கிடக்கும் காலிமனையில், மழை நீருடன் கழிவு நீரும் தேங்கிஉள்ளது. இது, குடியிருப்புகளின் சுற்றுச்சுவர் வழியாக கசிந்து, குடியிருப்புகளில் பாய்கிறது.மேலும் காலிமனையில் இருந்து, பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி வலம் வருகின்றன. இதனால், குடியிருப்பு வாசிகள் பீதியில் உள்ளனர்.அதேபோல், சுகாதார சீர்கேட்டுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.இப்பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என, அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அகற்றப்படவில்லைஇது குறித்து, அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க செயலர், என்.சிவகுமார், 65 கூறியதாவது:எங்கள் குடியிருப்பின் அருகே, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு சங்க குடோன் உள்ளது. இங்கு, கெட்டுப்போன அரிசி, பருப்புகள் கொட்டப்பட்டுள்ளன. இவை மழை நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள காலி மனையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், கொசு தொல்லையும் உள்ளது. அடிக்கடி விஷ ஜந்துக்களும் புகுந்து விடுகின்றன. குப்பையும், சில நாட்களாக சரிவர அகற்றப்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE