தரமணி - ஆண்கள், பெண்களுக்கான இரவு காப்பகம் கட்டும் பணி, தரமணியில் இரண்டு இடத்தில் நடக்கிறது.அடையாறு மண்டலம், 180வது வார்டு, திருவள்ளுவர் நகரில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. கட்டடம் மிகவும் சேதமடைந்திருந்ததால், தரமணி பிரதான சாலையில், புதிய கட்டடம் கட்டி, அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இடம் மாற்றப்பட்டது.பழைய கட்டடம் இருந்த இடத்தில், இரவு காப்பகம் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது. மொத்தம், 75 லட்சம் ரூபாய் செலவில், 2,200 சதுர அடி பரப்பளவில், இரண்டு அடுக்குடன், இரவு காப்பகம் கட்டப்படுகிறது.பழைய கட்டடத்தை இடித்து, மண் சமப்படுத்தும் பணி நடக்கிறது. அதே வார்டு, கோதாவரி தெருவில் ஒரு காலி இடம் உள்ளது. அங்கும், 75 லட்சம் ரூபாய் செலவில், 2,200 சதுர அடி பரப்பளவு கொண்ட, இரண்டடுக்கு மற்றொரு இரவு காப்பகம் கட்டப்படுகிறது.இருபாலர் தங்கும் வசதியுடன், இரண்டு காப்பகம் கட்டப்படுகிறது. எந்த காப்பகம், ஆண்கள், பெண்களுக்கு என, பணி முடிந்த பின் முடிவு செய்யப்பட உள்ளது.ஓராண்டுக்குள் கட்டுமான பணியை முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE