சென்னை = வேளச்சேரியில், 30 கோடி ரூபாயில், வனத்துறைக்கான தலைமை அலுவலகம் கட்டும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.வேளச்சேரியில், வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில், தங்கும் விடுதி, வன உயிரினங்கள் பாதுகாப்பு மையம் மற்றும் மரக்கன்று தயாரிப்பு மையம் உள்ளது.இதை ஒட்டி உள்ள இடத்தில், வனத்துறை தலைமை அலுவலகம் கட்டப்படும் என, 2018 ஜூனில், தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, 30 கோடி ரூபாயில், பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை, பொதுப்பணித்துறை செய்கிறது.மொத்தம், 15 ஆயிரத்து, 839 சதுர அடி பரப்பளவு இடத்தில், நான்கு மாடி கொண்ட கட்டடம் கட்டப்படுகிறது. இதில், ஒவ்வொரு மாடியும், 21 ஆயிரத்து, 477 சதுர அடி பரப்பளவு வீதம் கட்டப்படுகிறது.மூன்று மாடிகளில் அலுவலகம், சிறிய ஆய்வு கூட்ட அறை, கழிப்பறை, ஆவண பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படுகின்றன.நான்காவது மாடியில், 350 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கு, கழிப்பறை, ஆவண பாதுகாப்பு அறை, நுாலகம் உள்ளிட்ட வசதிகள் அமைகின்றன.வனத்துறை சார்பில், மாநில அளவில் நடக்கும் அனைத்து கூட்டங்களும், இங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தற்போது, 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. இம்மாத இறுதிக்குள், அனைத்து பணிகளையும் முடிக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE