பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை வெள்ளம்: மத்திய குழு ஆலோசனை என்ன?

Added : டிச 10, 2020
Share
Advertisement
சென்னை - சென்னையின் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேரும் மழைநீரை தேக்கி வைத்து, எப்படி குடிநீராக பயன்படுத்தலாம் என, துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது தெரியவந்து உள்ளது.புயல் மற்றும் கனமழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தென்சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. தடுப்பு

சென்னை - சென்னையின் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேரும் மழைநீரை தேக்கி வைத்து, எப்படி குடிநீராக பயன்படுத்தலாம் என, துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது தெரியவந்து உள்ளது.புயல் மற்றும் கனமழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தென்சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. தடுப்பு நடவடிக்கைஇங்குள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, எட்டு பேர் கொண்ட மத்திய குழு, சென்னை வந்தது.இதற்கு முன், இங்குள்ள அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செம்மஞ்சேரி பகுதிகளின் பாதிப்பும், தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.இதில், வேளச்சேரியில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக, ஒக்கியம்மடு வரை பெரிய கால்வாய் கட்டினால், வேளச்சேரி, மடிப்பாக்கம் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.சதுப்பு நிலம் பாதிக்காத வகையில், பல்லாவரம் - -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மற்றும் மேடவாக்கம் - -சோழிங்கநல்லுார் சாலையில் இருந்து, பக்கிங்ஹாம் கால்வாய் வரை, மூடு கால்வாய் அமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை கூறியது.சதுப்பு நிலத்தில் உள்ள குப்பை, சகதி, கோரை புல்லை அகற்றினாலே, நீரோட்ட தடை ஏற்படாது; வெள்ளம் கரை புரண்டோடி, ஒக்கியம்மடு சென்றடையும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.இல்லையென்றால், வேடந்தாங்கல், பிச்சாவரம் போல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மாற்றினால், வெள்ள பாதிப்பு தடுக்கப்படும் என, அவர்கள் கூறினர்.இதற்கு, நீர்நிலை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இயற்கை தன்மையை மாற்றினால், சதுப்பு நிலம் செயற்கையாக மாறிவிடும். குப்பை கொட்டுவது, ஆக்கிரமிப்பு, கழிவு நீர் விடுவதை தடுத்தாலே, சதுப்பு நிலத்தில் நீரோட்ட தடை ஏற்படாது என, கூறினர்.ஒவ்வொரு துறை அதிகாரிகளும் வைத்த எந்த பரிந்துரையும், இறுதி வடிவம் பெறவில்லை. குடிநீர் தேவைஇந்நிலையில், 6ம் தேதி, வேளச்சேரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளை, மத்திய குழு பார்வையிட்டது. அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பார்வையிட்ட போது, வெள்ள பாதிப்பு, நிலபரப்பு, சதுப்பு நிலத்தின் தன்மை, நீர் வழித்தடம் உள்ளிட்ட புகைப்படங்களை, அதிகாரிகள் காட்டினர்.இதற்கு, சதுப்பு நிலத்தில் சேரும் மழை நீரை சேமித்து, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாமே என, மத்திய குழு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.மத்திய குழு வழங்கிய ஆலோசனை குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சதுப்பு நிலத்தின் தன்மை, நீரோட்ட தடை, இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து முழுமையாக கேட்டனர். சென்னை நகர மைய பகுதியில், இவ்வளவு பெரிய சதுப்பு நிலமா; இங்கு சேரும், வெள்ளத்தை சேமித்தாலே, சென்னையின் குடிநீர் தேவையை போக்க முடியும். அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரி வளாகம், பயன்படாத அரசு காலி இடங்கள், மைதானங்களில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டி, அதில், சதுப்பு நிலத்தில் சேரும் மழை நீரை சேமிக்கலாம். சுற்றி உள்ள ஏரிகளில், உயரமான தடுப்பு சுவர் எழுப்பி, ஏரியின் கொள்ளளவை அதிகரிக்க செய்யலாம்.அரசுக்கு அறிக்கை சேமித்த நீரை சுத்திகரித்து, குடிநீராக வினியோகிக்கலாம். இதன் மூலம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்பும், வீணாக கடலில் கலக்கும் மழை நீரும் தடுக்கப்படும். தற்போது பயன்படுத்தும் கடல்நீர் சுத்திகரிப்பு குடிநீரும், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் குடிநீரின் தேவையும் குறையும். தொலைநோக்கு பார்வையுடன் நடவடிக்கை எடுக்கலாமே என, ஆலோசனை வழங்கினர். வெள்ள தடுப்பு நடவடிக்கையுடன், மத்திய குழு வழங்கிய ஆலோசனைகளையும் சேர்த்து, தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X