பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் பலியானவர் மனைவிக்கு இழப்பீடு

Added : டிச 10, 2020
Share
Advertisement
சென்னை - விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு, 25.37 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் தேவராஜன், 42; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 2017 ஜனவரியில், கிண்டியில் பைக்கில் சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த ஈச்சர் வேன், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேவராஜன், சிகிச்சை

சென்னை - விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு, 25.37 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் தேவராஜன், 42; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 2017 ஜனவரியில், கிண்டியில் பைக்கில் சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த ஈச்சர் வேன், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேவராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிலையில், தன் கணவரின் இறப்புக்கு, 1.90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, தேவராஜனின் மனைவி சகிலா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணை, நீதிபதி ம.சிவசக்தி முன் நடந்தது. விசாரணையில் மனுதாரர் கணவரின் இறப்பிற்கு, வேனை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதே, காரணம் என்பது உறுதியாகிறது.எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 25.37 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், சோழ எம்.எஸ்., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X