சென்னை - விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு, 25.37 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் தேவராஜன், 42; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 2017 ஜனவரியில், கிண்டியில் பைக்கில் சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த ஈச்சர் வேன், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேவராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிலையில், தன் கணவரின் இறப்புக்கு, 1.90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, தேவராஜனின் மனைவி சகிலா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணை, நீதிபதி ம.சிவசக்தி முன் நடந்தது. விசாரணையில் மனுதாரர் கணவரின் இறப்பிற்கு, வேனை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதே, காரணம் என்பது உறுதியாகிறது.எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 25.37 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், சோழ எம்.எஸ்., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE