சென்னை - சென்னை பை - பாஸ் சாலையில் மரக்கன்றுகளை நடும் பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அனுமதியை எதிர்பார்த்து, வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.உத்தரவுதாம்பரம் இரும்புலியூர் - புழல் இடையிலான சென்னை பை - பாஸ் சாலையில், அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அதிகளவில் பயணித்து வருகின்றன. இந்த வாகனங்களுக்கு இணையாக, இருசக்கர வாகனங்களின் நடமாட்டமும் இச்சாலையில் அதிகரித்து உள்ளது. எனவே, சென்னை பை - பாஸ் சாலையில், காற்று மாசு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலைகளின் இரண்டு புறங்களிலும், சாலையின் மைய தடுப்பு பகுதிகளிலும், அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை செயல்படுத்தும் வகையில், புழலில் துவங்கி இரும்புலியூர் வரை, சாலையின் இரண்டு புறங்களிலும், வனத்துறையால் மரங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.எதிர்பார்ப்புஇவை, தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றன. மைய தடுப்பில் மரக்கன்றுகளை நடுவதற்கு, வனத்துறையினர் தயார்படுத்தி வைத்துள்ளனர்.பல மாதங்கள் ஆகியும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், தமிழக பிரிவு அதிகாரிகள், இன்னும் அனுமதி வழங்கவில்லை. பருவ மழை காலங்களில் மரக்கன்றுகளை நட்டால், அவை எளிதாக வளர்ந்துவிடும். மழைக்காலம் முடிய உள்ள நிலையில், மரங்களை நடுவதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆணைய அதிகாரிகளின் அனுமதியை எதிர்பார்த்து, வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE