சென்னை - வீணாகும் உணவை, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும், 'நோ புட் வேஸ்ட் சென்னை' என்ற திட்டத்தை, கலெக்டர் சீதாலட்சுமி, சைதாப்பேட்டையில் நேற்று துவக்கி வைத்தார்.வீணாகும் உணவுகளை, ஏழைகளுக்கு வழங்கும் நோக்கில், தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில், 'நோ புட் வேஸ்ட் சென்னை' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இத்திட்டத்தை, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி நேற்று, சைதாப்பேட்டையில் துவக்கி வைத்து, அப்பகுதியைச் சேர்ந்தோருக்கு, உணவு வழங்கினார்.இது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சதாசிவம் கூறிய தாவது:உணவு சேகரித்து, பசியோடு உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக, இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.அதற்காக, சென்னையில், 'நோ புட் வேஸ்ட்' மற்றும் 'புட் பேங்க் இந்தியா' ஆகிய, இரண்டு தொண்டு நிறுவனங்களால், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் மிஞ்சும் உணவுகள், சேகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.முதற்கட்டமாக, சரவண பவன், ஸ்ரீ பாலாஜி பவன், அக்சயம் உள்ளிட்ட, 30 முக்கிய உணவகங்களில், மிஞ்சும் உணவுகளை வழங்க, பதிவு செய்துள்ளன.இது, படிப்படியாக, அனைத்து உணவகங்களிலும் விரிவுபடுத்தப்படும். அத்துடன், உணவு தேவைப்படுவோர், முதியோர் இல்லம், காப்பகங்கள் உள்ளிட்ட, அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிகழ்வில், உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE