சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூடுபிடிக்கிறது சிறுமி மாயம் வழக்கு

Added : டிச 10, 2020
Share
Advertisement
தாம்பரம் - ஆட்டோ ஓட்டுனரின் மகள் மாயமான வழக்கில், அவரை தேடி, மேட்டுப்பாளையத்திற்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.சென்னை, தாம்பரம் அடுத்த சேலையூர், காமராஜபுரம், பவநந்தியார் பிரதான சாலையைச் சேர்ந்தவர், சீனிவாசன், 43; ஆட்டோ ஓட்டுனர்.இவரது, 13 வயது மகளை, 3ம் தேதி அதிகாலையில் இருந்து காணவில்லை. இது குறித்து, சீனிவாசன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார்

தாம்பரம் - ஆட்டோ ஓட்டுனரின் மகள் மாயமான வழக்கில், அவரை தேடி, மேட்டுப்பாளையத்திற்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.சென்னை, தாம்பரம் அடுத்த சேலையூர், காமராஜபுரம், பவநந்தியார் பிரதான சாலையைச் சேர்ந்தவர், சீனிவாசன், 43; ஆட்டோ ஓட்டுனர்.இவரது, 13 வயது மகளை, 3ம் தேதி அதிகாலையில் இருந்து காணவில்லை. இது குறித்து, சீனிவாசன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் அலட்சியமாக இருந்தனர்.மகள் மாயமாகி, மூன்று நாட்களாகியும், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த சீனிவாசன், டிச., 5ம் தேதி காலை, சேலையூர் காவல் நிலைய வாசல் முன் தீக்குளித்தார். மீட்கப்பட்ட அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, 6ம் தேதி காலை உயிரிழந்தார்.அதன்பின், இது குறித்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து, போலீசார் விசாரித்தனர்.அதில், கல்லுாரி மாணவர் ஒருவருடன், சீனிவாசன் மகளுக்கு காதல் ஏற்பட்டு, அவருடன் சென்றது தெரிந்தது. மாயமான சிறுமி மற்றும் அவரை அழைத்து சென்றவர் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.மொத்தம், 150 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மேட்டுப்பாளையத்தில் இருவரும், இருப்பதாக கூறி, அவர்களை பிடிக்க, அங்கு, விரைந்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X