ஏலியன்கள் இருப்பது உண்மை என்றும், அது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தெரியும். அவர்கள் இருப்பதை இரகசியமாக வைத்திருக்கிறார்கள் என இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹைம் எஷெட் என்பவர் இஸ்ரேல் விண்வெளி பாதுகாப்பு திட்டத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர்.

பிரபஞ்சத்தைப் பற்றி இவர் நூல்களும் எழுதியுள்ளார். இந்த நிலையில் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வேற்று கிரகவாசிகள் உண்மை எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க அரசாங்கத்திற்கும் வேற்றுகிரகவாசிகளின் கேலடிக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும் கூறியுள்ளார். பிரபஞ்சத்தினை பற்றி ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ள விரும்புவதால் அமெரிக்க அரசாங்கத்திற்கும் வெளிநாட்டினருக்கும் இடையே ஒரு உடன்பாடு உள்ளது அது தான் கேலக்டிக் கூட்டமைப்பு. இந்த ஒப்பந்தத்தில் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு இரகசிய தளமும் அடக்கம். டிரம்புக்கு இது பற்றி தெரியும். ஆனாலும் அவர்களின் இருப்பை வெளிப்படுத்துவதை நிறுத்திவிட்டார். ஏனெனில் கேலடிக் கூட்டமைப்பு மனிதர்கள் இன்னும் தயாராக இல்லை என்று வலியுறுத்தியது.
பரிணாமம் அடைந்து நாம் ஒரு கட்டத்தை அடைய வேண்டும் விண்வெளி மற்றும் விண்கலங்கள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று வேற்று கிரகவாசிகள் வலியுறுத்தினர். இன்று சொல்வதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தாள், நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பேன். என்று அவர் கூறினார்.

இதுவரை, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பூமிக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை சாத்தியத்தை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. கடந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் விண்வெளியில் போரிடுவதற்காக முழு அளவிலான பென்டகன் படையை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். இது அமெரிக்க ராணுவத்தில் ஒரு பகுதியாகும். பேராசிரியர் ஹைம் எஷெட் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பலர் கிண்டல் செய்தும், பலர் ஆதரித்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அவரது கருத்துக்கு அமெரிக்க அரசாங்கமோ டிரம்போ இதுவரை பதில் அளிக்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE