'மத சுதந்திர அத்துமீறலில் பாக்., அரசே ஈடுபடுகிறது'

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: 'மத சுதந்திரத்தை பறிக்கும் செயலில், பாகிஸ்தான் அரசே ஈடுபடுகிறது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், திட்டமிட்டு மத சுதந்திரத்தை பறிக்கும் நாடுகள் குறித்த அறிக்கையை, பாதுகாப்பு அமைச்சகத்திடம், ஏப்ரலில் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில், சீனா, பாக்., உள்ளிட்ட எட்டு நாடுகள், திட்டமிட்டு மத சுதந்திரத்தை பறிக்கும்
ReligiousFreedom, Pakistan, SamBrownback, US, RaisedIssues, India, Ambassador, மத சுதந்திரம், பாகிஸ்தான், அத்துமீறல், அமெரிக்கா

வாஷிங்டன்: 'மத சுதந்திரத்தை பறிக்கும் செயலில், பாகிஸ்தான் அரசே ஈடுபடுகிறது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், திட்டமிட்டு மத சுதந்திரத்தை பறிக்கும் நாடுகள் குறித்த அறிக்கையை, பாதுகாப்பு அமைச்சகத்திடம், ஏப்ரலில் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில், சீனா, பாக்., உள்ளிட்ட எட்டு நாடுகள், திட்டமிட்டு மத சுதந்திரத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர், மைக் பாம்பியோ, நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார். இதில், இந்தியா இடம் பெறாதது குறித்து, நேற்று, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க துாதர், சாமுவேல் பிரவுன்பேக், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக செய்தியாளர்களிடம் பேசியதாவது:


latest tamil news



பாகிஸ்தானில், அந்நாட்டு அரசே, எண்ணற்ற வகையில், மத சுதந்திர விதிமீறல்களில் ஈடுபடுகிறது.ஆனால், இந்தியாவில், கட்டாய மதமாற்ற தடை சட்டம் போன்ற ஒரு சிலவற்றில் தான், அரசின் பங்களிப்பு உள்ளது.இந்தியாவில், வகுப்புவாத வன்முறைகள் தான் அதிகம் உள்ளன. அத்தகைய சம்பவங்களுக்குப் பின், எடுக்கப்படும் போலீஸ் மற்றும் நீதித் துறை நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தான் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பாக்.,கில் கட்டாய திருமணம் மூலம், சிறுபான்மையினப் பெண்கள், சீனாவிற்கு கொண்டு வரப்படுகின்றனர். அந்நாட்டில், சிறுபான்மையினரான, ஹிந்து, கிறிஸ்துவ பெண்களை, காமப் பசிக்கு இரையாக்குவதும், கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்வதும் நடக்கிறது.


latest tamil news



இது போன்ற காரணங்களால் தான், திட்டமிட்டு மத சுதந்திரத்தை பறிக்கும் நாடுகள் பட்டியலில், பாக்., தொடர்ந்து இடம் பெற்று வருகிறது; இந்தியா இடம் பெறாமல் உள்ளது. மைக் பாம்பியோ, இந்தியாவுக்கு, பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இந்தியா குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரச்னைகள் பற்றி, அவர் அரசுடன் பேசியுள்ளார். தற்போதைய சூழலில், இந்தியாவை பட்டியலில் சேர்க்கத் தேவையில்லை என, அவர் கருதி இருக்கலாம். அவரது முடிவில், நான் தலையிட முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.


நிராகரிப்பு


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், இந்தியா குறித்து அளித்துள்ள பரிந்துரைகளை, மத்திய அரசு நிராகரித்துள்ளது. 'ஆணையத்தின் அறிக்கை ஒருதலைபட்சமானது. இந்தியா குறித்த ஆணையத்தின் தவறான கண்ணோட்டம் புதிதல்ல என்ற போதிலும், இம்முறை அது புதிய உச்சத்தை தொட்டுள்ளது' என, மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
10-டிச-202021:13:48 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy இந்த நியூஸை பிரசுரம் செய்கின்ற வெகு சில தமிழ் பத்திரிகைகலில் தினமலர் ஒன்று.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
10-டிச-202020:06:46 IST Report Abuse
Sivagiri அரசே ஈடுபடுகிறது ? . . . அரசே என்றால் என்ன ? தீவிரவாதிகள் பயங்கரவாதிகள்-தான் அங்கே அரசாங்கத்தை நடத்துகின்றனர் . . .
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
10-டிச-202012:17:35 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ பல நூற்றாண்டா கருப்பின வெளுப்பின பாகுபாடு, பிறநாட்ட கெடுக்க, மதமாற்ற கோடிக்கணக்குல பணம்குடுத்து கலவரம் தூண்டுறது, பேரழிவு ஆயுதம் எல்லாம் நீ வச்சிகிட்டு அது மத்தநாட்டுல இருக்குன்னு அவனுக நாட்டு தலைவனுகளை போட்டுதள்ளிட்டு நாட்ட புடிக்கிறது, எல்லா நாட்டுலயும் உன் ராணுவத்தை வக்கிறது அப்படியின்னு பட்டியல் போட்டா நீங்கதாண்ணெ அதுல மொதோ இடத்துல இருக்கீங்கோ. ஆனா மத்தவன எல்லாம் பட்டியல் போடுறீங்கோண்ணா, இந்த சீனா காரன் மட்டும் கொஞ்சம் நம்பிக்கையானவனா இருந்தா இந்தியா சீனா சேந்து உன்னை உண்டு இல்லையினு ஆக்கிரலாம், ஆனா சப்பமூக்கன் எப்பியுமே நம்பமுடியாதவனா இருக்கான்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X