பொது செய்தி

தமிழ்நாடு

கோபியில் கண்டறியப்பட்ட 91 பள்ளி செல்லா குழந்தை

Added : டிச 10, 2020
Share
Advertisement
கோபி: பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பில், கோபி யூனியனில் இதுவரை, 91 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின், கோபி வட்டார வளமையம் சார்பில், கடந்த நவ.,21 முதல், பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் கணேசன் கண்காணிப்பில், குடியிருப்பு வாரியாக, ஆசிரியர்

கோபி: பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பில், கோபி யூனியனில் இதுவரை, 91 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின், கோபி வட்டார வளமையம் சார்பில், கடந்த நவ.,21 முதல், பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் கணேசன் கண்காணிப்பில், குடியிருப்பு வாரியாக, ஆசிரியர் பயிற்றுனர், சிறப்பு ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோபி யூனியனுக்கு உட்பட்ட, 21 பஞ்சாயத்துகளில், இதுவரை, 264 குடியிருப்புகளில் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது. இவற்றில், 1 முதல், ஐந்து வயதுடைய மாற்றுத்திறன் கொண்டவர்களில், நான்கு பேர் பள்ளி செல்லாதவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதேபோல், இயல்பானவர்களில், 11 முதல், 14 வயதுடையவர்களில், ஒன்பது பேரும், 15 முதல், 18 வயதுடையவர்களில், 82 பேர் என மொத்தம், 91 பேர் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளாக கோபியில் கண்டறியப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X