பொது செய்தி

தமிழ்நாடு

பூம்புகாரில் பூஜை பொருட்கள் கண்காட்சி

Added : டிச 10, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, மேட்டூர் சாலை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் சபரிமலை சீசனை முன்னிட்டு, பூஜை பொருட்கள் கண்காட்சி விற்பனை துவங்கியது. இது குறித்து, மேலாளர் சரவணன் கூறியதாவது: ஐம்பொன் சிலை, பித்தளை விளக்குகள், தஞ்சை கலை தட்டு, சந்தன மரச்சிற்பம், கற்சிற்பம், வலம்புரி சங்கு, ஒன்று முதல், 14 முகம் வரையிலான ருத்ராட்சம், வாஸ்து உருளி, காமதேனு,

ஈரோடு: ஈரோடு, மேட்டூர் சாலை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் சபரிமலை சீசனை முன்னிட்டு, பூஜை பொருட்கள் கண்காட்சி விற்பனை துவங்கியது. இது குறித்து, மேலாளர் சரவணன் கூறியதாவது: ஐம்பொன் சிலை, பித்தளை விளக்குகள், தஞ்சை கலை தட்டு, சந்தன மரச்சிற்பம், கற்சிற்பம், வலம்புரி சங்கு, ஒன்று முதல், 14 முகம் வரையிலான ருத்ராட்சம், வாஸ்து உருளி, காமதேனு, கோமாதா, குபேர விளக்கு, அகர்பத்தி, வாசனை திரவியம், சந்தனக்கட்டை, சுவாமிகளுக்கு பயன்படுத்தும் நகைகள், நவரத்தின கற்கள், முத்து நகை போன்றவை உள்ளன. கும்பகோணம், சுவாமிமலை பஞ்சலோக பொருட்கள், மாமல்லபுரம் கற்சிற்பம் போன்றவை உள்ளன. 50 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X