ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், 2021 சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு பணியாளர்கள் நியமனம் செய்வது குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவன் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதியிலும் சேர்த்து, 2,215 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, நான்கு பணியாளர்கள் என, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஓட்டுப்பதிவு பணியில் பணியமர்த்தப்பட உள்ளனர். அனைத்து துறைகளிலும், பணிபுரியும் பணியாளர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில், பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. பட்டியல் பெறப்பட்டு, கணினி சுழற்சி முறையில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். எஸ்.பி., தங்கதுரை, ஆர்.டி.ஓ.,க்கள் ஈரோடு சைபுதீன், கோபி ஜெயராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, தேர்தல் தாசில்தார் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE