பொது செய்தி

தமிழ்நாடு

100 பேருக்கு செயற்கை கால் செய்ய அளவீடு சேகரிப்பு

Added : டிச 10, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பிரீடம் டிரஸ்ட் சார்பில், 100 பேருக்கு செயற்கை கால் செய்வதற்கான அளவீடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி சீனிவாசன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், செயற்கை கால் செய்வதற்கான அளவீடு எடுக்க, 120 பேர் பதிவு செய்தனர். அதில், 20 பேர் செயற்கை கை கேட்டதால், அவர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பிரீடம் டிரஸ்ட் சார்பில், 100 பேருக்கு செயற்கை கால் செய்வதற்கான அளவீடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி சீனிவாசன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், செயற்கை கால் செய்வதற்கான அளவீடு எடுக்க, 120 பேர் பதிவு செய்தனர். அதில், 20 பேர் செயற்கை கை கேட்டதால், அவர்கள் நீங்கலாக மற்றவர்களுக்கு அளவீடு எடுக்கப்படுகிறது. முட்டிக்கு கீழ் செயற்கை கால் செய்ய, 9,000 ரூபாய், முட்டிக்கு மேல் வரை செய்ய, 16 ஆயிரம் ரூபாய் செலவாகும். இங்கு, முற்றிலும் இலவசமாக செய்து கொடுக்கப்படும். அளவெடுத்தவர்களுக்கு, ஒரு மாதத்தில் செயற்கை கால் வந்து விடும். முதன்முறையாக செயற்கை கால் பெற்றால், ஆறு மாதத்துக்கு பயன்படுத்தலாம். இரண்டாம் முறையாக சரி செய்து, மீண்டும் நான்காண்டு பயன்படுத்தலாம். சென்னையை சேர்ந்த பிரீடம் டிரஸ்ட் மூலம், ஒன்பது மாநிலங்களில் இதுபோன்ற முகாம் நடத்தி, 27 ஆயிரத்து, 500 பேருக்கு செயற்கை கால் வழங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி மலைப்பகுதியில், செயற்கை கால் தேவைப்படுவோர், இங்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், இவர்களுக்காக வரும், 11ல் தாளவாடி தாலுகா அலுவலக வளாகத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X