பவானி: அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ், ஆழ்குழாய் அமைக்கும் பணியின் போது, ஏராளமான மரங்கள் அழிக்கப்படும் என்பதால், அதை காப்பற்ற பவானி அடுத்துள்ள, சித்தோடு அருகே கங்காபுரம் பகுதியில், செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சார்பில், மரங்களுக்கு மாற்று இடத்தில் மறுவாழ்வு அமைக்கலாம் என, முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று இப்பகுதியில் உள்ள வேம்பு, அரசன், புங்கை மற்றும் நவாப்பழம் என நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், வேருடன் பிடுங்கி, மாற்று இடத்தில் நடுவதற்கான பணிகள் நடந்தன. இதனால், சமூக ஆர்வலர்கள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE