தமிழ்நாடு

உதவித்தொகை போட்டித்தேர்வுக்கு பயிற்சி இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
சேலம்: உதவித்தொகை வழங்க நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு, பயிற்சி அளிக்கப்படாததால், அரசு பள்ளி மாணவ, மாணவியர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.தமிழகத்தில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஊரக திறனாய்வு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வு உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேசிய

சேலம்: உதவித்தொகை வழங்க நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு, பயிற்சி அளிக்கப்படாததால், அரசு பள்ளி மாணவ, மாணவியர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


தமிழகத்தில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஊரக திறனாய்வு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வு உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுக்கும், தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உயர்கல்வி முடிக்கும் வரை உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு, நிதியுதவி அளிக்கும் இப்போட்டி தேர்வுகளில் பங்கேற்க, ஆண்டுதோறும், அரசு பள்ளிகளில் மாலை நேரங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். நடப்பு கல்வியாண்டில், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும், இத்தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, ஜனவரியில் நடத்தப்பட உள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, பாடங்களே நடத்தப்படாத நிலையில், இத்தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் உள்ளது. இதனால், போட்டித்தேர்வுகளில் பங்கேற்க, பலரும் ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில், ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணி நடக்கிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, அந்த வாய்ப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. இதனால், நடப்பு கல்வியாண்டில், உதவித்தொகை போட்டித்தேர்வுகளில், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. ஏழை மாணவர்களுக்கு, உதவித்தொகை பயனாக இருக்கும் நிலையில், அதை நடப்பு கல்வியாண்டில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X